சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி வாலிபர் பலி

Added : நவ 29, 2019
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, வாலிபர் இறந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி - சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாசலம் அடுத்த பூவனுார் ரயில்வே கேட் அருகே, நேற்று காலை 9:00 மணியளவில் சென்றபோது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்தார். இதனால், எக்ஸ்பிரஸ் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டு, 5 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

அதில், இறந்தவர் மங்கலம்பேட்டை, அண்ணா நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் மணிவண்ணன், 34; என்பதும், டெய்லரான இவர், மிட்டாய் வகைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.ரேவதி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற 3 வயது குழந்தையும் உள்ளனர். ரயில் பாதையை கடந்தபோது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X