பொது செய்தி

தமிழ்நாடு

கீழப்பாலையூர் மணிமுக்தாற்றில்தடுப்பணை கட்டும் பணி துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் மணிமுக்தாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணி துவங்கியது.

கம்மாபுரம் பகுதி மணிமுக்தாற்றில், தடுப்பணை கட்டி மழைநீரை சேகரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து, மாவட்ட கனிமவள அறக்கட்டளை சார்பில், 18 கோடி ரூபாய் மதிப்பில், கீழப்பாலையூர் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நேற்று காலை, இதற்கான பூமி பூஜை நடந்தது. விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், உதவி பொறியாளர் வெங்கடேசன், ஒப்பந்ததாரர் அய்யாவு, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் முனுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கமணி, இளைஞரணி செயலர் தென்னவன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X