பொது செய்தி

தமிழ்நாடு

யூ டியூப்பை பயன்படுத்தி புதுமையான கற்றல் முறை

Added : நவ 29, 2019
Advertisement
யூ டியூப்பை பயன்படுத்தி புதுமையான கற்றல் முறை

ராமநாதபுரம் : கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு என்பார்கள். கல்வியில் நாளுக்கு நாள் பல்வேறு புதுமைகள், புதிய நுட்பங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்கேற்ப நம்மை 'அப்டேட்' செய்ய வேண்டும். பிளாக் போர்டுகள் அனைத்தும் இன்று ஸ்மார்ட் போர்டுகள் ஆகிவிட்டன. அனைத்து பள்ளிகளும் கணினி வழிக்கு மாறி வருகின்றன.

ராமநாதபுரம் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆரோக்கிய பன்னீர் செல்வம் சமூக வலைத்தளமான யூ டியூப்பை பயன்படுத்தி புதுமையான கற்றல் முறைகளை புகுத்தி வருகிறார். காந்தி கிராமிய பல்கலையில் வகுப்பறையில் தொடர்பு சாதனங்களின் பங்கு என்ற ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளார். நல்லாசிரியர் விருது, கல்வி ரத்னா, சுவாமி விவேகானந்தர் விருதுகளை பெற்றுள்ளார்.

புதுமையான கற்றல் முறைகள் குறித்து இனி அவர் பேசுவார்.... இங்கு 21 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு புதுமையாக கற்றுக்கொடுத்தால் எளிதில் எதையும் புரிந்து கொள்வார்கள் என்பதால் தினமலர் பட்டம் இதழை வாங்கி அதனை ஒட்டி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். யூ டியூப்பில், மாணவர்களின் வகுப்பறை யதார்த்தத்தை பதிவு செய்யும் வகையில் 'லைவ் மைர்லின்' என்ற யூ டியூப் சேனலை ஆரம்பித்து வகுப்பறையில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக பாடல் பாடுவது, நடனம், கேள்வி கேட்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து வெளியிடுவேன்.

அந்த யூ டியூப் லிங்கை மாணவர்களிடம் எழுதி கொடுத்து அவர்களின் பெற்றோரை பார்க்க சொல்லுவேன். திரையிலும் மாணவர்களின் நடவடிக்கைகளை திரையிடுவோம். மாணவர்கள் அவர்களின் செய்கைகளை திரையில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்பட்டு அடுத்த முறை நன்றாக செய்கிறேன், என கூறுவார்கள். மாணவர்களின் தனித்திறனை வளர்க்க இது நல்ல முயற்சியாக எனக்கு தோன்றியது. வாய்ப்பாட்டை எளிதில் கற்றுக்கொடுக்க கிராமிய கும்மிப்பாடல்களை பயன்படுத்துகிறேன். இது போன்ற இன்னும் பல புதுமை முறைகள் உள்ளது, என்றார். இந்த 'இன்னோவேடிவ்'ஆசிரியர்.

இவரை பாராட்ட: 86680 62245.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X