வெள்ளாடு வளர்க்கும் விவசாயிக்கு சிகிச்சை குறித்து செயல் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாடு வளர்க்கும் விவசாயிக்கு சிகிச்சை குறித்து செயல் விளக்கம்

Added : நவ 29, 2019

கடலுார் : பரன் மேல் வெள்ளாடுகள் வளர்க்கும் விவசாயிக்கு, புற ஒட்டுண்ணுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து செயல் விளக்க பயிற்சி நடந்தது.

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில், கடலூர் கம்மியம்பேட்டையில் விவசாயி இளங்கோவன், பரன் மேல் கொட்டில் முறையில், சேலம் கருப்பு மற்றும் தலைச்சேரி இன வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த கொட்டில் முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயல் விளக்க பயிற்சி நேற்று நடந்தது.

கடலுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன் தலைமையில் குடற்புழு மற்றும் ஒட்டுண்ணி சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் மற்றும் தாது உப்பு கட்டி ஆகியவற்றை விவசாயி இளங்கோவனிடம் வழங்கினர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் டாக்டர் முரளி, குடற்புழு நீக்கம் குறித்து சிகிச்சை அளித்தார்.

4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் தாது உப்பு கட்டி மற்றும் உப்பு தூள் விவசாயிக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்ராஜ், கண்ணன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X