காரைக்குடி : காரைக்குடியில் மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழம் கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. இதை மக்கள் வாங்கி செல்கின்றனர்.மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழத்திற்கு தனி மவுசு உண்டு. கடந்த சில மாதங்களாக பழக்கடைகளில் மட்டுமே விற்று வந்தது. இன்றைக்கு தள்ளுவண்டிகளில் விற்பனைக்கு வந்துள்ளன. பெங்களூருவில் இருந்து வியாபாரிகள் வாங்கி வந்து, காரைக்குடியில் விற்கின்றனர். ஒரு கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டது என்பதால், பழத்தை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.வியாபாரி முருகேசன் கூறியதாவது: 'ட்ரை ப்ரூட்'ஐ விட அத்திப்பழம் நேரடியாக உடலுக்கு நன்மை தரும். குறைந்த விலையாக இருப்பதால், அதிகம் வாங்கி செல்கின்றனர், என்றார்.