கேரத்தில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரத்தில் பதக்கங்களை குவிக்கும் மாணவர்

Added : நவ 29, 2019

ராமநாதபுரம் : மண்டபம் அருகே உச்சிப்புளி நேஷனல் அகாடமி பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தாமோதரா 15. இவர் கேரம் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறார். உலக கேரம் வீரராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது 7 வயதில் பொழுது போக்காக அக்கம் பக்கத்து வீடுகளில்நண்பர்களுடன் கேரம் விளையாட துவங்கினார்.ஆர்வத்தால் 3ம் வகுப்பு படிக்கும் போது மாநில கேரம் போட்டியில் மாநிலத்தில் 3 ம் இடம் பெற்றார். பின் கேரத்தில் அதிக கவனம் செலுத்ததுவங்கினார். விடுமுறை நாட்களில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பயிற்சி பெறுகிறார். பள்ளி நாட்களில் தினசரி ஒன்றரை மணி நேரம் பயிற்சி பெறுகிறார். மதுரையை சேர்ந்த பயிற்சியாளர் ஆனந்தகுமார் மூலம் முழுமையாக பயிற்சி பெற்றவர் பள்ளிக்குழுமம் நடத்திய போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்று 2 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கேரம் அசோசியேஷன் நடத்திய போட்டியில் தேசிய அளவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த போட்டிகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தாமோதரா கூறுகையில், உலக அளவில் சிறந்தகேரம் விளையாட்டு வீரராக வேண்டும், என்பதே குறிக்கோள். அதற்காக தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன்.நான் படிக்கும் பள்ளி நிர்வாகம் உதவிகளை செய்கின்றனர். படிப்பிலும் நல்ல நிலையில் உள்ளேன், என்றார்.இவரை பாராட்ட: 75987 00374.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X