பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச கராத்தே போட்டியில் குளோபல் பள்ளி சாதனை

Added : நவ 29, 2019
Advertisement

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எம்.கோயில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர். 15 வயதிற்குட்பட்ட கட்டா பிரிவில் கிஷோர் கண்ணா என்ற மாணவர் தங்கமும், 11 வயதிற்குட்பட்ட பிரிவில் சைபான் வெண்கலமும்,13 வயதிற்குட்பட்ட கட்டா பிரிவில் யோகேஸ்வரன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.மாணவர்களை பள்ளி தாளாளர் காந்தி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.பயிற்சியாளர் ரென்சி, சுரேஷ்குமார், கவுரிசங்கர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி மற்றும் முதல்வர் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X