பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு நாளை துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு நடக்கிறது.

விழுப்புரம், வருவாய் மாவட்டத்தில் 2019-20 கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு வரும் 1ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் 30 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 8 ஆயிரத்து 955 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். அரசு, நகராட்சி மற்றும் அரசு உதவித்தொகை பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில், 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிகாமல் இருந்தால் மட்டுமே இந்த தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்களாவர்.


2018-19ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று, முழு ஆண்டு தேர்வில் எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவிகள் 50 சதவீதம் விழுக்காடு மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீதம் விழுக்காடு மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும்.தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் கடந்த அக்., 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தலைமை ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலத்திற்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். நேற்று 29ம் தேதி இணையதளத்தில் நுழைவு சீட்டு பெற்றவர்கள் வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மையத்திற்கு சரியாக காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். தேர்வர்களை பாதுகாப்போடு அழைத்து வந்து, முடிந்தவுடன் தலைமை ஆசிரியர்கள் திரும்ப அழைத்து செல்ல வேண்டும்.

இந்த தேர்வு இரு பகுதிகளை கொண்டதாகும். மனத்திறன் படிப்பு தேர்வு - காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், படிப்பறிவு தேர்வு - காலை 11.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X