சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை கொலை செய்ய திட்டம் கூலிப்படையினர் 9 பேர் கைது ஆயுதங்கள், கார் பறிமுதல்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (8)
Advertisement
வாலிபரை கொலை செய்ய திட்டம் கூலிப்படையினர் 9 பேர் கைது ஆயுதங்கள், கார் பறிமுதல்

போடி :தேனி வாலிபரை கொலை செய்ய போடியில் தங்கியிருந்த கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஆயுதங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் அன்பரசன் 24. கமுதி அருகே மண்டலமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 21. அபிராமபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் 20. வணியபூக்குளம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் 21. ராமேஸ்வரம் அருகே அல்லிமலையை சேர்ந்தவர் ஜோசப்பாண்டியன் குமார் 20. நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன் 47. தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ் 20. தினேஷ் 22. கார்த்திக் 20, ஆகிய ஒன்பது பேரும் நேற்று முன்தினம் இரவு போடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.அவர்களின் அறையில் பெரிய பட்டா கத்திகள், நீளமான அரிவாள்கள், இரும்பு கம்பிகள், ராடுகள் உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. தகவலறிந்த போடி டவுன் போலீசார் ஒன்பது பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:மலேசியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரியின் சகோதரி அமுதேஸ்வரியிடம் தேனியை சேர்ந்த அசோக்குமார் பேஸ்புக், 'வாட்ஸ்ஆப்' மூலம் பழகியுள்ளார். பணப் பரிமாற்றமும் நடந்துள்ளது. இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டதால் அமுதேஸ்வரியின் சகோதரி விக்னேஸ்வரி 45, மலேசியாவில் இருந்து அக்.30ல் தேனி வந்து அசோக்குமாரை சந்தித்து மிரட்டியுள்ளார்.எனவே அசோக்குமாரை கொலை செய்ய அவர் இந்த கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கலாம் என தெரிகிறது. 9 பேரையும் கைது செய்து விசாரிக்கிறோம். ஆயுதங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
30-நவ-201920:10:06 IST Report Abuse
oce விதி வலியது. தப்பித்தார்.
Rate this:
Share this comment
Cancel
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201919:03:15 IST Report Abuse
Sivramkrishnan Gk ஜோசப்பாண்டியன் குமார் 20, இவனுக்கு முட்டு கொடுத்து ஒரு கும்பல் கிளம்பி அவனை வெளியில் எடுக்கும்.
Rate this:
Share this comment
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
01-டிச-201916:46:33 IST Report Abuse
Kumarநீயே ஒரு கிரிமினல் மாதிரி இருக்கிற . பாத்து மண்டை பத்திரம்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-நவ-201915:33:22 IST Report Abuse
Endrum Indian இப்போ பார்க்கணுமே நீண்ட நெடிய காலம் வெறும் விசாரணை தான் நடக்கும். கண்டேன் சுட்டேன் என்று இருக்க வேண்டும் இந்த மாதிரி ஆட்களிடம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X