கம்மாபுரம் : கம்மாபுரம் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான நவீன வாசக்டமி (என்.எஸ்.வி) கருத்தடை முறை குறித்து இருவார விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி தலைமை தாங்கினார். டாக்டர் காவியா, ஹலால் அஹமது, புள்ளியியலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். சுகாதார நிலைய மருந்தாளுனர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், ஆண்களுக்கான நவீன வாசக்டமி முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.