பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு சாகுபடி செயல் விளக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
திண்டிவனம் : ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடிக்கான செயல் விளக்கம் நடந்தது. வானுார் வட்டார வேளாண்மைத் துறை மூலம் ஆத்மா திட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த கண்டுநர் சுற்றுலாவிற்கு விவசாயிகள் நெடி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு, நிழல் வலை மூலம் அமைக்கப்பட்ட நாற்றங்காலை

திண்டிவனம் : ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடிக்கான செயல் விளக்கம் நடந்தது.

வானுார் வட்டார வேளாண்மைத் துறை மூலம் ஆத்மா திட்டத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த கண்டுநர் சுற்றுலாவிற்கு விவசாயிகள் நெடி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு, நிழல் வலை மூலம் அமைக்கப்பட்ட நாற்றங்காலை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கு வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார். நிழல்வலை நாற்றங்கால் அமைக்க அரசு மானியம் அளிப்பது குறித்தும், நிழல் வலை அமைத்து கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்யும் தொழில் நுடபங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நாற்றங்கால் நடவு செய்வதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் நரசிம்மராஜ், உதவி மேலாளர்கள் சந்திரசேகர், வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X