கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடன் பெற்று மோசடி செய்தவருக்கு '3 ஆண்டு'

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :போலி ஆவணங்கள் வாயிலாக வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக போலி ஆவணங்களை கொடுத்து ராயபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002ல் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.இந்த மோசடிக்கு அப்போதைய வங்கி மேலாளரும்

சென்னை :போலி ஆவணங்கள் வாயிலாக வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தொழில் நிறுவனம் நடத்தி வருவதாக போலி ஆவணங்களை கொடுத்து ராயபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002ல் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.இந்த மோசடிக்கு அப்போதைய வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக வங்கி மேலாளர் சாட்சி கையெழுத்திட்ட இருவர் மற்றும் கோபாலகிருஷ்ணன் என நான்கு பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.கோபாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்ததால் வங்கி மேலாளர் மற்றும் சாட்சி கையெழுத்திட்ட இருவர் மீதான வழக்கு தனியாக நடந்தது. இந்த வழக்கில் மூவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து 2013ல் சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணன் வழக்கு விசாரணைக்காக ஆஜரானார். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிபதி ஜவஹர் முன் நடந்து வந்தது. சி.பி.ஐ. தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.வி.தினகர் வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.மேலும் 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை மூன்று மாதங்களுக்குள் வங்கிக்கு செலுத்த வேண்டும். தவறினால் கோபாலகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
30-நவ-201919:21:31 IST Report Abuse
K. V. Ramani Rockfort நம் நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் கோடிக்கணக்கில் இருப்பதாக தகவல் உள்ளது, அந்த பட்டியலில் உள்ள நபர்கள் மீது வழக்குகளை நம் சென்னை CBI நீதிமன்றத்தில் அப்பீல் செய்து (இந்த தீர்ப்பு போல) விரைவில் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X