தமிழ்நாடு

திறக்கப்படாத வாரச்சந்தை; அல்லல் படும் மக்கள்

Added : நவ 29, 2019
Advertisement
திறக்கப்படாத வாரச்சந்தை; அல்லல் படும் மக்கள்

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரில், புதிதாக கட்டி முடித்து வாரச்சந்தை திறக்கப்படவில்லை.

மக்கள் மழையிலும்சகதியிலும் அல்லல் படுகின்றனர்.பள்ளத்துார் பேரூராட்சியில், 20 ஆயிரத் திற்கும் மேற்பட்டமக்கள் வசிக்கின்றனர். இங்கு வாரந்தோறும் வெள்ளியன்று சந்தைகூடுகிறது. இச்சந்தைக்கு, புதுவயல், செட்டிநாடு, கொத்தரி, மணச்சைஉட்பட, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள்இங்கு கடை போடுகின்றனர்.

நுாற்றாண்டை கடந்த இச்சந்தையில், வியாபாரிகளும், பொதுமக்களும் மழையிலும் வெயிலிலும் சிரமப்பட்டனர். இதனால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே50 லட்சம் செலவில் புதிதாக வாரச்சந்தை கட்டடம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. முழுமையாக பணி முடிந்தும் கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது, பெய்து வரும் தொடர் மழையால் சகதியாகிப்போன சந்தை வளாகத்தில் நடந்து செல்லவே மக்கள் சிரமப்படுகின்றனர்.

பள்ளத்துார் ரவி கூறுகையில்; மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட, வாரச்சந்தை கட்டடம்6 மாதமாக திறக்கப்படாமல் கிடக்கிறது. மக்கள்மழையிலும், சகதியிலும் அல்லல்படுகின் றனர். மக்களின் வேதனையை அறிந்து புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில்;அனைத்து வேலைகளும் முடிந்து, எங்கள் அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி விட்டோம். ரூ.1 கோடிக்குமேலான கட்டடம் என்பதால், முதலமைச்சர் தான் வீடியோகான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடு, நடக்கிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X