பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்காக எதையும் எதிர்கொள்ள வேண்டும் கடற்படை தலைமை அதிகாரி பேச்சு

Added : நவ 29, 2019
Share
Advertisement
அரக்கோணம் ''நாட்டுக்காக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்'' என கடற்படை தலைமை அதிகாரி ஜோதீஷ் குமார் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்குள்ள ெஹலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 93வது பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஐ.என்.எஸ். ராஜாளி தளபதி ஷீரங் ஜோக்லேக்கர் வரவேற்றார். தமிழகம் மற்றும்

அரக்கோணம் ''நாட்டுக்காக எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்'' என கடற்படை தலைமை அதிகாரி ஜோதீஷ் குமார் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்குள்ள ெஹலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 93வது பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஐ.என்.எஸ். ராஜாளி தளபதி ஷீரங் ஜோக்லேக்கர் வரவேற்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஜோதீஷ் குமார் தலைமை வகித்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 20 வாரம் பயிற்சி பெற்ற ஒன்பது வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் அனைத்து பயிற்சி பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய வீரர் பிரிடிஸ் மேத்தாவுக்கு சுழற்கேடயத்தை வழங்கி அவர் பேசியதாவது:நாட்டில் எத்தனையோ பணிகள் இருக்கும்போது உங்களை கடற்படையில் சேர ஊக்குவித்த பெற்றோரை பாராட்டுகிறேன். 20 வாரம் கடுமையான பயிற்சி பெற்றதை எப்போதும் மறக்கக் கூடாது. நாட்டுக்காக எதையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பையே உயிர் மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது அதிநவீன தொழில் நுட்பங்கள் கடற்படையில் கையாளப்படுகிறது. அதற்கு தக்கபடி வீரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து ெஹலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X