பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு குறைந்த செலவில்கால்நடை தீவனம் தயாரிப்பு பயிற்சி

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம் : வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை பல்கலை., பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் விஜயலிங்கம் பேசியதாவது:

விவசாயிகள் கால்நடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து மிகுந்த தீவனங்களை உணவாகவும், கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானியங்களை அரைத்து அடர் தீவனமாக தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். தீவனப்புற்களான வேலி மசால், கினியா புல், கோ-5 ஆகிய புரதம் நிறைந்த தீவனப்பயிர்களை கால்நடைகளுக்கு வழங்கலாம்.ஊறுகாய் புல் தயாரித்தல், ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் தீவனப்புல் வளர்த்தல், முளைக்கட்டிய தானியங்களை தீவனமாக வழங்குதல், கோமாரி நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகள், கால்நடைகளுக்கான தடுப்பூசி அட்டவணை முறைகள் குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு பயிர் வேலி அமைப்பதற்கான குசும்பா விதைகள் மற்றும் தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவதற்கான இனக்கவர்ச்சி பொறிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.உச்சிப்புளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, வேளாண்மை அலுவலர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X