பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் மேம்பாலத்தில் புதிய ஆட்டோ ஸ்டாண்டு

Added : நவ 29, 2019
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மீது, ஆட்டோ ஸ்டாண்டு அமைத்து, பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவனம் பகுதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்ததால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் ரயில் நிலையத்தையொட்டி மேம்பாலம் கட்டப்பட்டது.

திண்டிவனம் நகர பகுதிக்குச் செல்பவர்கள், மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சென்று வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே வழியாக சென்ற ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். இதையொட்டி, கடந்த 15 ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்தது.இதன் காரணமாக பொது மக்கள், மேம்பாலத்திற்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு வழியாக செல்கின்றனர்.கீழிருந்து மேம்பாலம் வரும் பொது மக்களை ஏற்றுவதற்காக அங்கு புதிதாக ஒரு ஆட்டோ ஸ்டாண்டு உருவாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே மேம்பாலம் சிறியதாக உள்ளது. தற்போது, ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X