பொது செய்தி

தமிழ்நாடு

துார்ந்து போன மாரி ஓடை வாய்க்கால்

Added : நவ 29, 2019
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் மாரி ஓடை வாய்க்கால்கள் துார்ந்து கிடப்பதால், வெள்ளநீரில் விளை நிலங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது.

விருத்தாசலம் மாரி ஓடையில் கிராமங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், மணிமுக்தாற்றில் கலக்கிறது. அதில், மங்கலம்பேட்டை அடுத்த பவழங்குடி வழியாக வரும் ஓடை நீர் மற்றும் கவணை, செம்பளக்குறிச்சி, சின்னபண்டாரங்குப்பம், விஜயமா நகரம், பெரியவடவாடி, சின்னவடவாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அதிகளவு தண்ணீர் வருவது வழக்கம்.கனமழை காலங்களில் மாரி ஓடை வழியாக வரும் தண்ணீர், ரயில்வே ஜங்ஷன் - எருமனுார் இணைப்பு சாலையில், உள்ள கல்வெர்ட் வழியாக மணிமுக்தாற்றில் கலக்கிறது.

இந்நிலையில், மாரி ஓடை வாய்க்கால்களில் செடிகள், கருவேல மரங்கள் மண்டி, துார்ந்து கிடக்கிறது. மழைநீர் வாய்க்காலில் முழு கொள்ளளவு செல்ல முடியாமல், அருகிலுள்ள விளைநிலங்களில் தேங்கும் அபாயம் உள்ளது.அதுபோல், மாரி ஓடை வாய்க்கால் பாலம் மூழ்கி விடுவதால், எருமனுார் இணைப்பு சாலை துண்டிக்கப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் எருமனுார், தொட்டிக்குப்பம், எ.வடக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள், விருத்தாசலம் நகரை சுற்றிக் கொண்டு, மணலுார், எருமனுார் மணிமுக்தாறு மேம்பாலம் வழியாக செல்லும் அவலம் உள்ளது. எனவே, துார்ந்து கிடக்கும் மாரி ஓடை வாய்க்காலை துார்வார, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X