பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார், துணை பதிவாளருக்கு நோட்டீஸ் :தகவல் ஆணையர் நடவடிக்கை

Added : நவ 29, 2019
Share
Advertisement
ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மாநில தகவல் ஆணைய விசாரணையில் திருச்சுழி தாசில்தார், பரமக்குடி கூட்டுறவு துறை துணை பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டார்.அரசு மற்றும் அரசிடமிருந்து நிதிபெறும் நிறுவனங்களில் உரிய தகவல்கள் கேட்டு கிடைக்க பெறாதவர்கள் மாநில தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை அறியும்

ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மாநில தகவல் ஆணைய விசாரணையில் திருச்சுழி தாசில்தார், பரமக்குடி கூட்டுறவு துறை துணை பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டார்.அரசு மற்றும் அரசிடமிருந்து நிதிபெறும் நிறுவனங்களில் உரிய தகவல்கள் கேட்டு கிடைக்க பெறாதவர்கள் மாநில தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை அறியும் சட்டத்தில் விண்ணப்பித்திருந்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது. சிவகங்கை, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 25 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் நில அடங்கல் தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் அவருக்கு உரிய தகவலை அளிக்கவில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு மனு செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது. உரிய பதில் அளிக்காத தாசில்தார் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைத்து, உரிய விளக்கம் அளிக்காததால் 25 ஆயிரம் அபராதம் விதிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. பரமக்குடியை சேர்ந்த சேகர் என்பவர் கூட்டுறவு சங்க முறைகேடு , அதில் சம்பந்தப்பட்ட அதிகாரி அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டுறவு துறை அலுவலர்களிடம் தகவல் கேட்டார். உரிய பதில் அளிக்காததால், பரமக்குடி துணை பதிவாளர் அலுவலகத்திற்கும் 25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டும், விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X