பொது செய்தி

தமிழ்நாடு

பாசன திட்டங்களுக்கு ரூ.749 கோடி ஒதுக்கீடு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை புனரமைக்க 749 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.நீர்வள ஆதாரத்துறை சார்பில் காவிரி படுகையில் உள்ள பாசன திட்டங்களை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதல் கட்டமாக கட்டளை கால்வாய் பாசன திட்டத்தை புனரமைக்க 335 கோடி ரூபாய்; நொய்யல் ஆறு பாசன திட்டங்களை மறுசீரமைக்க 230 கோடி ரூபாய்; ராஜா வாய்க்கால் திட்டத்தை புதுப்பிக்க 184 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்நிதியில் எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் அனைத்தும் துார் வாரப்பட்டு புனரமைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X