பொது செய்தி

தமிழ்நாடு

மின் தடை தள்ளி வைப்பு

Added : நவ 29, 2019
Advertisement

திருவாடானை : விவசாயிகள் நலன் கருதி மின்தடை தேதி தள்ளி வைக்கபட்டு மின் சப்ளை செய்யப்பட்டது.

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் நேற்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை அறிவித்தனர். பயிர் இன்ஸ்சூரன்ஸ் பதிய விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் நலன் கருதி மின் தடை செய்யாமல் மின் சப்ளை செய்யப்பட்டது.

இது குறித்து திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப்செல்வராஜ் கூறியதாவது:நவ.30 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் இ சேவை மையங்களில் அதிகாலை முதல் விவசாயிகள் கூட்டமாக சென்று ஆர்வமாக காப்பீடு செய்கின்றனர்.இன்று(நவ.30) கடைசி நாள் என்பதால் மின்தடை செய்யபட்டால் விவசாயிகள் பாதிக்கபடுவார்கள். எனவே நேற்று நடக்க இருந்த பராமரிப்பு பணிகள் நிறுத்தபட்டு மின்சப்ளை செய்யப்பட்டது. மற்றொரு நாளில் மின்தடை செய்யப்படும், என்றார்.இதனால் மின்வாரிய அதிகாரிகளை விவசாயிகள் பாராட்டினர். இதே போல் பரமக்குடியிலும் இன்று அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X