பொது செய்தி

தமிழ்நாடு

பொதுப்பணித்துறையில் ஏ.இ.,க்களுக்கு பதவி உயர்வு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :பொதுப்பணி துறையில், 279 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் பணி துவங்கியுள்ளது.பொதுப்பணி துறையில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. அரசு அறிவிக்கும் பணிகளுக்கு, திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை, செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் இணைந்து மேற்கொள்கின்றனர். துறையில், 102 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.இதனால், கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல், நீர்வள திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில், 98 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.இதனால், உதவி பொறியாளர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை, 300க்கு மேல் அதிகரித்துள்ளது. திட்ட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர், இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.முதல்வர் பழனிசாமி உத்தரவில், 279 உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, உதவி செயற்பொறியாளர்களாக, காலி பணியிடங்களில் நியமிக்க ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X