ஆபத்தான கட்டடத்தில் மாணவர்கள்; வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமம்| Dinamalar

ஆபத்தான கட்டடத்தில் மாணவர்கள்; வகுப்பறையின்றி மாணவர்கள் சிரமம்

Added : நவ 29, 2019

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள பேயன்பட்டியில், சேதமடைந்த பள்ளிக்கட்டடத்தால் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

கல்லல் ஒன்றியம் கோவிலுார் ஊராட்சிக்குட்பட்ட பேயன்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்,7 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளி தொடங்கி 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 2009--10ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.கடந்த 2010ல் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ரூ.10.25லட்சம் செலவில் 3 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.இக்கட்டடம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

மழைகாலத்தில், மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகும் நிலை உள்ளது. தரைதளம் பெயர்ந்து மாணவர்கள் அமர முடியாத நிலை உள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறையில் வைத்து பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த சந்தியாகு கூறுகையில்;சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல மாணவர்கள் இப்பள்ளியை நம்பி உள்ளனர். சேதமடைந்த கட்டடத்தை பற்றி தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாணவர்களின் பாதுகாப்பை கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X