சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெருவங்கூர் ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு

Added : நவ 29, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன ஏரி நீர் வரத்து கால்வாயை கண்டுபிடித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 152 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி பெருவங்கூர், வி.பாளையம், மாடூர், வீரசோழபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவங்கூர் அணைக்கட்டில் இருந்து பெருவங்கூர் ஏரிக்கு நீர் வரத்து இருந்தது. பருவ மழைக் காலங்களில் கோமுகி அணையில் தண்ணீர் திறக்கும் போது ஏரிகளுக்கு நீர் வரத்து இருந்தது.

இந்நிலையில், ஏரியின் நீர் வரத்து கால்வாய் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளால், தற்போது கால்வாய் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏரிக்கு நீர் வரத்து இன்றி சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழைநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. இதனால், விவசாயிகள் பலர் பாசனத்திற்கு நீர் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏரிகளின் தண்ணீர் தேக்கமின்மையால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வற்றி விடுகிறது.

இதனையொட்டி பெருவங்கூர் விவசாயிகள் பலர் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை (நீர் ஆதாரம்) அலுவலகத்தில் நேற்று ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் வழிவகுக்கவில்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X