பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் கொசுப்புழு ஒழிப்புபணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

Added : நவ 29, 2019
Advertisement

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

நகராட்சி சுகாதார அலுவலர் சண்முகவேல் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன் பேசியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடீஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு புழுவாக மாறி உற்பத்தியாகிறது.அவற்றை வீடுகளில் ஆய்வு செய்து அபேட் மருந்து ஊற்றி தண்ணீரை கொட்ட வேண்டும். மேலும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கொசுப்புழுக்களை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும், என்றார். இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

*இதே போல் பரமக்குடி அருகே வெங்கிட்டான்குறிச்சியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணி நடந்தது. பள்ளி குழந்தைகள்,பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பரமக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல் ஹமீது, நிர்மலா, சுப்பிரமணியன், வேல்ச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X