பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்து, பருத்தி, நிலக்கடலை பயிரிட கடன்

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை : கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிரிட டிச.,1 முதல் பயிர் கடன் வழங்கப்படும்,'' என மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் பழனீஸ்வரி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:கலெக்டர் ஜெயகாந்தன் பரிந்துரையின் படி, இம்மாவட்டத்தில் பாசனம் மற்றும் மானாவாரியாக பயிறு வகை பயறுகளை பயிரிடும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். உளுந்து பயிரிட ஏக்கருக்கு 15 ஆயிரத்து 750, பாசன வசதியுடன் நிலக்கடலை பயிரிட ஏக்கருக்கு 19 ஆயிரத்து 800, மானாவாரியாக பயிரிட 15 ஆயிரத்து 400 கடன் வழங்கப்படும்.

அதேபோன்று பருத்திக்கு பாசன வசதியில் பயிரிட 14 ஆயிரத்து 750ம், மானாவாரியில் பயிரிட 13 ஆயிரத்து 800, பச்சை மிளகாய் பயிரிட ஏக்கருக்கு 22 ஆயிரத்து 700 ரூபாய் கடன் வழங்கப்படும்.

தற்போது சீசன் என்பதால் உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிரிட டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கடன் தரப்படும்.

ஆண்டுதோறும் வங்கி கடன்: இது தவிர ஆண்டு முழுவதும் மிளகாய்க்கு ஏக்கருக்கு 20 ஆயிரத்து 800, சிறிய மிளகாய்க்கு 24 ஆயிரத்து 350, தென்னந்தோப்பு பராமரிப்பிற்கு 21 ஆயிரத்து 100, மாந்தோப்பு பராமரிப்பிற்கு 17 ஆயிரத்து 400, வாழை பராமரிப்பிற்கு 42 ஆயிரத்து 400 ரூபாய் வரை கடன் வழங்கப்படும். பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து கடன் பெறலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X