கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க.,வை கட்சியாக பதிய தடை கோரி புகழேந்தி வழக்கு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :அ.ம.மு.க.வை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த மனு:அ.ம.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தினகரன் அக்கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இல்லை. அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது.தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தோம். தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடு இல்லாதால் பலர் விலகி விட்டோம்.மேலும் உள்கட்சி விதிகளை உருவாக்காமலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமலும் தினகரன் மக்கள் பிரதி நிதித்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். மேலும் தன்னை பொதுச்செயலர் என பிரகடனம் செய்து தன் விருப்பபடி நிர்வாகிகளை நியமித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பதிவு செய்ய தினகரன் பல்வேறு வகையில் முயற்சித்து வருகிறார். எனவே கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யவும் அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை விதிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X