சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்ப்பு! திண்டிவனத்தில் புதிய பஸ் நிலைய பணிகள் விரைவில் துவங்க ... நிர்வாக அனுமதி கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை தேவை

Added : நவ 29, 2019
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பாக ஆன் லைன் மூலம் பொது மக்கள் மத்தியில் எந்த விதமான எதிர்ப்பும் வரவில்லை என்பதால், விரைவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி, தொடங்க வாய்ப்புஏற்பட்டுள்ளது.

திண்டிவனத்தில், நகராட்சிக்கு சொந்தமான இந்திரா காந்தி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ரயில்வே மேம்பாலத்தையொட்டியுள்ள பஸ் நிலையத்திற்குள் அனைத்து மார்க்கங்களிலிருந்து வரும்வாகனங்கள் உள்ளே வந்து வெளியே செல்வதற்கு இட வசதி கிடையாது.இதனால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் அனைத்து பஸ்களும், பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டுச் செல்லவேண்டிய நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில் ஒதுங்கி நிற்க இடமின்றி பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்திற்கு, கடந்த 2001ல் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த 2013ல் புதிய பஸ் நிலையம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கியதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால்புதிய பஸ் நிலையம் தொடங்குவதற்கான எந்த பணியும் இதுவரை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.இதற்கிடையே, ஜெ., அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் செலவில் பஸ் நிலையம் அமைக்க அரசு கொள்கை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பொது மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகள், நகராட்சியின் இணையதளத்தில் (http://www.tnurbantree.tn.gov.in/tindivanam/) வரும் 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் பேரில் 28 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், புதிய பஸ் நிலையம் வருவதற்கு, பொது மக்கள் மத்தியிலிருந்து எந்தவிதமான எதிர்ப்பு கருத்துக்கள் வரவில்லை என்று, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.இதிலிருந்து,திண்டிவனத்திற்கு புதிய பஸ் நிலையம் வருவதற்கு பொது மக்கள் மத்தியில் ஒருமித்த ஆதரவு நிலையே உள்ளது என்று தெளிவாகின்றது. கருத்து கேட்பு முடிந்த உடன், ரூ.20 கோடி மதிப்பீட்டில், தனியார் பங்களிப்புடன் (p.p.p) திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைவதற்கான பணிகள் துவங்க உள்ளது.

இதன் படி, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தனியார் பங்களிப்புடன் பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் அல்லது ஆன்லைன் மூலம் தகவல் வெளியிடப்படும்.பஸ் நிலையம் கட்டுவதற்கு முன்வரும் நிறுவனங்களில், எந்த நிறுவனம் தகுதியானது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவின் பேரில், ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் கொண்டு குழுவினர், பஸ் நிலையம் கட்டுவதற்கான பணியை எந்த நிறுவனத்திற்கு ஒதுக்குவது என்று முடிவு செய்வார்கள்.இதன் பிறகு, நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம், பஸ் நிலையம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

முறைப்படி நிர்வாக அனுமதி கிடைத்த உடன், பஸ் நிலையத்தை கட்டும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், குறைந்தது 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே, பஸ் நிலையம் கட்டும் பணியை நிறைவு செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X