பொது செய்தி

தமிழ்நாடு

குழி தோண்டி புதைக்கப்பட்ட 'கஜா' நிவாரண அரிசி மூடைகள்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுக்கோட்டை :'கஜா' புயல் நிவாரணமாக வந்த அரிசி மூடைகளை குழி தோண்டி புதைத்த சம்பவம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தின் பின்புறம் நேற்று துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அங்கு பூச்சிகளுடன் அரிசிகள் சிதறி கிடந்தன.அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது கெட்டுப் போன அரிசி மூடைகள் அங்கு புதைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த அறந்தாங்கி ஆர்.டி.ஓ. குணசேகர் தாசில்தார் சூரிய பிரபு டி.எஸ்.பி. கோகிலா மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் துர்நாற்றம் வீசிய இடத்தை மேலும் தோண்டினர். அங்கு தலா 25 கிலோ எடை கொண்ட 23 அரிசி மூடைகள் புதைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.ஆர்.டி.ஓ. குணசேகர் கூறியதாவது: அரசர்குளம் கீழ்பாதி பகுதிக்கு கஜா புயல் நிவாரணத்திற்காக வந்த அரிசி பைகளும் தார்ப்பாய்களும் ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கும் அளவிற்கு இல்லை.அவை எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கிராம சேவை மைய கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அரிசி மூடைகள் ஒரு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகத்தினர் எங்களிடம் தெரிவிக்காமல் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-நவ-201900:47:56 IST Report Abuse
தமிழ்வேல் (வரி) காசுக்கு வந்த கேடு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X