சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றது

Added : நவ 29, 2019
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அணைக்கட்டு அருகில், சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து புறப்படும் வெள்ளாற்றில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் திறந்து விடப்படும் தண்ணீர் தடைபட்டு, முழு அளவில் சென்று சேர்வதில்லை.மேலும், வெள்ளாற்றில் சீமை கருவேல முள்புதர்கள் நன்கு வளர்ந்து அடர்ந்த காடாக

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அணைக்கட்டு அருகில், சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து புறப்படும் வெள்ளாற்றில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் திறந்து விடப்படும் தண்ணீர் தடைபட்டு, முழு அளவில் சென்று சேர்வதில்லை.மேலும், வெள்ளாற்றில் சீமை கருவேல முள்புதர்கள் நன்கு வளர்ந்து அடர்ந்த காடாக மாறியுள்ளது. வெள்ளாற்றில் மீன், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.வீடுகளில் உள்ள கழிவு நீர் வெள்ளாற்றில் விடப்படுவதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, சீமை கருவேல மரங்களை அழித்து, வெள்ளாற்றை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X