பொது செய்தி

தமிழ்நாடு

இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Added : நவ 29, 2019
Advertisement

விருத்தாசலம் : இளம் விஞ்ஞானிகள் போட்டியில், முதல்நிலை தேர்வுக்கு தகுதிபெற்ற, விருத்தாசலம் இன்பேன்ட் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், இளம் விஞ்ஞானிகள் தேர்வுக்கு, கடந்த ஜூலை மாதம், கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில், இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவர் கிருஷ்ணராஜன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ராஜவிஷ்ணு, பிளஸ் 1 மாணவர் சரண்சிபி ஆகியோர் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவிலான முதல்நிலை தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

மேலும், சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில், (எம்.ஐ.டி.,) மூன்று நாட்கள் நடக்கும், பயிற்சி பட்டறை மற்றும் போட்டிகளில் பங்கேற்க, சென்றனர். அவர்களை பள்ளி தாளாளர் விஜயகுமாரி சால்வை அணிவித்து வாழ்த்தினார். ஆசிரியர் பிரதீப்குமார், அலுவலர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X