கராத்தே; பதக்கங்களை அள்ளிய டைகர்

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:தேசிய அளவிலான கராத்தே போட்டியில், டைகர் கராத்தே கிளப் அணியினர், 5 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.கேரளா, 'கோஜூக்கான கராத்தே டூ இந்தியா' சார்பில், 'கோஜூக்கான சாம்பியன் லீக்' தேசிய அளவிலான கராத்தே போட்டி, திருச்சூர் டி.எஸ்.ஜி.ஏ., உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, கேரளா, மேற்குவங்கம் பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஜி தோக்கு காய் கராத்தே பள்ளி சார்பில், கோவை டைகர் கராத்தே கிளப்பை சேர்ந்த, 11 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாணவர்கள் பிரிவு, 6-7 வயதுக்கு உட்பட்ட 'கலர் பெல்ட்' குமிட்டே பிரிவில் சஞ்சய் முதலிடம்; 10-11 வயதுக்கு உட்பட்ட 'கலர் பெல்ட்' குமிட்டே பிரிவில் சிவதர்ஷன் முதலிடம்; 10-11 வயதுக்கு உட்பட்ட 'பிளாக் பெல்ட்' குமிட்டே பிரிவில் தமிழ்செல்வன் முதலிடம்; 12-13 வயதுக்கு உட்பட்ட கட்டாவில் மூன்றாமிடம், குமிட்டேவில் லீ ஸ்ரீ சாம்ராஜ் முதலிடம்; 12-13 உட்பட்ட குமிட்டே பிரிவில் லீலா கிருஷ்ணன் மூன்றாமிடம்; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான குமிட்டேவில் ரமேஷ் அரவிந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.மாணவியர் பிரிவு, 8-9 வயது பிரிவுக்கு உட்பட்ட 'கலர் பெல்ட்' கட்டா மற்றும் குமிட்டேவில் பிரஹர்ஷித்தா மூன்றாமிடம்; 10-11 வயதுக்கு உட்பட்ட 'கலர் பெல்ட்' குமிட்டே திக் ஷா முதலிடம்; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான 'பிளக் பெல்ட்' குமிட்டேவில் மகாலட்சுமி மூன்றாமிடம் பிடித்தனர்.போட்டி முடிவில், டைகர் கராத்தே கிளப் அணி, 5 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர் சிவசண்முகம் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் பாராட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X