திண்டிவனம் : திண்டிவனம் அரிமா சங்கத்தின் சார்பில், பொது உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திண்டிவனம் பி.ஆர்.எஸ். துணிக்கடையும், திண்டிவனம் அரிமா சங்கமும், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த பொது உயர் சிறப்பு மருத்துவ முகாம், துர்கம் சுப்ரமணிய செட்டியார் திருமண நிலையத்தில் நேற்று காலை நடந்தது.முகாமிற்கு, அரிமா சங்க தலைவர் கிரிதரப்பிரசாத் தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஓவியர் தேவ், வழக்கறிஞர் கார்த்திக், சுந்தரம், ராமமூர்த்தி, நவநீத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா சங்க செயலாளர் சங்கர் வரவேற்றார். பி.ஆர்.எஸ். துணிக்கடை நிர்வாகிகள் ரங்கமன்னார், சரத்சந்தர் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.முகாமில் மேம்படுத்தப்பட்ட உயர் நிலை தொலை மருத்துவ வாகனம் மூலம் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமில் பங்கேற்றவர்களுக்கு இ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட் ஆகியவை எடுக்கப்பட்டது. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், அரிமா சங்க நிர்வாகிகள் சித்தார்த்தன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமை முகாம் ஒருங்கிணைப்பாளர் தேஜேஷ் ஒருங்கிணைத்தார். அரிமா சங்க பொருளாளர் சஞ்சீவி நன்றி கூறினார்.