பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் அமைத்தவகுப்பறை நுாலகம்

Added : நவ 29, 2019
Advertisement

காரைக்குடி : காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களின் துணையோடு வகுப்பறை நுாலகத்தை திறந்தனர்.

இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, ஈ பிரிவு மாணவர்கள் கல்வி அறிவை மேம்படுத்தவும், அறிவை வளப்படுத்தவும் தங்களது வகுப்பறையில் நுாலகத்தை திறந்தனர்தங்களது படிப்புத் திறனும், வாசிக்கும் திறனும் மேம்படும் என மாணவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பள்ளி ஆசிரியர்களின் துணையோடு 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை மாணவர்கள் நுாலகத்தில் இடம்பெற செய்தனர். திறப்பு விழாவில் ஆசிரியர் பிரசாத் மணிமாறன் வரவேற்றார்.உதவி தலைமையாசிரியர் அண்ணாமலை, முதுகலை ஆசிரியர் கோபிச்சந்திரன் தலைமையேற்றனர். தமிழாசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கந்தசாமி, விஜயா, அருள்ராஜ் வாழ்த்தினர். வகுப்புத் தலைவர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X