ஜி.டி.பி., வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு

Updated : டிச 01, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (31+ 41)
Advertisement
 ஜி.டி.பி., வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவு,இரண்டாவது,காலாண்டில் ஆறு ஆண்டுகளில்,இல்லாத,குறைவு

புதுடில்லி:ஜி.டி.பி., எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 4.5 சதவீதமாக குறைந்து
உள்ளது.

கடந்த ஜூலை முதல், செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. 2012- - 13ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்குப் பிறகு அதிக சரிவை கண்டது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தான்.


மந்த நிலை

தேவைக்கு ஏற்றவாறு மக்கள் செலவழிக்காதது, நிறுவனங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்காதது அல்லது பணிக்கு அதிக நபர்களை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பொருளாதார மந்தநிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் மொத்த உள்நாடு
உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி, 6
சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. அப்படி இருந்தால், அது, 2012ம் ஆண்டுக்கு பிறகான சரிவாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கு, மிகவும் யதார்த்தமான அளவீடாக கருதப்படும், மொத்த மதிப்புக் கூட்டல், இரண்டாவது காலாண்டில், 4.3 சதவீதமாக உள்ளது.
இது, இதற்கு முந்தைய காலாண்டில், 4.9 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 6.9 சதவீதமாக இருந்தது.

சமீபத்தில், 'பிட்ச்' குழுமத்தைச் சேர்ந்த, 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்' நிறுவனம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 4.7 சதவீதமாக குறைந்திருக்கும் என, கணிப்பை வெளியிட்டிருந்தது.மேலும், நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்றும் அது தெரிவித்திருந்தது.


சலுகைகள்

இதேபோல், இந்திய ரிசர்வ் வங்கியும் நாட்டின் வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில், 6.1
சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கு முன், 6.9 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்ததை, 6.1 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர், 20ம் தேதியன்று, 'மினி பட்ஜெட்' என்று சொல்லும் வகையில், பல்வேறு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவித்தார்.

கார்ப்பரேட் வருமான வரி, 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும்
அக்டோபரிலிருந்து துவக்கப்படும் புதிய நிறுவனங்களுக்கும், 17 சதவீதமாக வரி குறைக்க
பட்டது.மேலும் ரிசர்வ் வங்கியும், 1.35 சதவீதம் அளவுக்கு வட்டி விகித குறைப்பை அறிவித்தது. இருப்பினும் பொருளாதார மந்தநிலை தொடர்ந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
30-நவ-201919:15:31 IST Report Abuse
தோலுரிப்பவன் வல்லரசு நாடு என்றால் இப்படி தான் இருக்கும் போல பின்னர் வல்லரசு என்றா சும்மாவா அதுவும் பிஜேபி வந்தபிறகுதான் நாம் வல்லரசு ஆனோம் கெத்து தான் போங்கள்
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
30-நவ-201919:05:19 IST Report Abuse
Believe in one and only God இந்தியாவின் பொருளாதார சரிவை நியாயப்படுத்தும் பிஜேபி வெறியர்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
30-நவ-201915:44:38 IST Report Abuse
ashak பொருளாதாரம் சிறப்பா இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X