சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டன் கணக்கில் புகையிலை விற்பனை பெயரளவில் வழக்கு: 7 பேர் கைது

Added : நவ 29, 2019
Share
Advertisement
கமுதி : கமுதி செட்டியார், நாடார், வாரச்சந்தை பஜார் உட்பட பல இடங்களில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பதுக்கி வைக்கப்பட்டு கடைகளில் விற்கின்றனர். அபிராமம், பெருநாழி, மண்டலமாணிக்கம், பேரையூர் கடைகள், கமுதியில் உள்ளபத்துக்கும் மேற்பட் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து கிராமங்களில் புகையிலை பாக்கெட்டுகளை விற்கின்றனர். இது அனைத்து துறை

கமுதி : கமுதி செட்டியார், நாடார், வாரச்சந்தை பஜார் உட்பட பல இடங்களில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பதுக்கி வைக்கப்பட்டு கடைகளில் விற்கின்றனர். அபிராமம், பெருநாழி, மண்டலமாணிக்கம், பேரையூர் கடைகள், கமுதியில் உள்ளபத்துக்கும் மேற்பட் மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து கிராமங்களில் புகையிலை பாக்கெட்டுகளை விற்கின்றனர்.

இது அனைத்து துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் பெயரளவில் சிறு கடைகளில் மட்டும் சோதனை செய்து, 15 பாக்கெட், 20 பாக்கெட் அளவில் மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர்.

கமுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா வைத்திருந்ததாக யாகப்பராஜ், சிவகுமார், முத்துக்குமார், அரசு என நான்கு கடைக்காரர்கள், மண்டலமாணிக்கத்தில் சரவணன், கூடக்குளத்தில் கருப்பையா, அபிராமத்தில் பழனிக்குமார் என 7 பெட்டிக்கடைக்காரர்கள் மீது கமுதி, மண்டலமாணிக்கம், அபிராமம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். ஆனால் இவர்களிடம்20 க்கும் குறைவான புகையிலை பாக்கெட்டுகள் மட்டுமே இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.எனவே கமுதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைசெய்யும்மொத்த விற்பனையாளர்களை கண்டறிந்து, புகையிலை விற்பனையை தடுக்க, எஸ்.பி., வருண்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X