அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரஜினி கட்சி ஆரம்பித்தாலே அது அதிசயம் தான்'

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :''ரஜினி கட்சி ஆரம்பித்தாலே அதிசயம் தான். அவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்'' என பா.ஜ. தேசிய பொதுச்செயலர் முரளிதர் ராவ் கூறினார்.அவர் அளித்த பேட்டி:இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக படகுகள் விடுவிக்கப்பட்டது வரவேற்கதக்கது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இலங்கை தமிழர்களின் வாழ்க்கைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இலங்கையில் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.பா.ஜ. தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாநில தலைவர் தேர்வு தேர்தல் வைத்து முறைப்படி நடக்கும். அடுத்த இரண்டு வாரங்களில் தேர்தல் நடத்தி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.பா.ஜ.வில் தி.மு.க.வில் உள்ளது போல வாரிசுகளை தலைவர்களாக நியமிப்பதில்லை. பா.ஜ.வை விமர்சனம் செய்யாமல் இருந்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வேலையில்லாமல் போய் விடும். நடிகர் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அவர் கட்சி ஆரம்பித்தாலே அது அதிசயம் தான். பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணி கணவன் மனைவி உறவை போல உள்ளது; அதை பொதுவில் பேச முடியாது. தென் தமிழகத்தில் பா.ஜ. வளர்ச்சிக்காக இளைஞரணி சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X