மாவட்ட துளிர்  வினாடி வினா போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட துளிர்  வினாடி வினா போட்டி

Added : நவ 29, 2019
Share
தேவகோட்டை : தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட துளிர் வினாடி வினா போட்டி முள்ளிக்குண்டு சேவியர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி தாளாளர் மைக்கேல் சகாய அன்பு போட்டியை துவக்கி வைத்தார்.போட்டியில் 6, 7, 8 வகுப்பில் சேம்பார் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி முதலிடம், சேவினிப்பட்டி ஊ.ஒ..நடுநிலைப்பள்ளி இரண்டாமிடம், தேவகாட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். பள்ளி மூன்றாமிடமும், 9,10 ம்

தேவகோட்டை : தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட துளிர் வினாடி வினா போட்டி முள்ளிக்குண்டு சேவியர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.

கல்லுாரி தாளாளர் மைக்கேல் சகாய அன்பு போட்டியை துவக்கி வைத்தார்.போட்டியில் 6, 7, 8 வகுப்பில் சேம்பார் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி முதலிடம், சேவினிப்பட்டி ஊ.ஒ..நடுநிலைப்பள்ளி இரண்டாமிடம், தேவகாட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். பள்ளி மூன்றாமிடமும், 9,10 ம் வகுப்பில் தேவகோட்டை குழந்தையேசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், படமாத்துார் சக்தி உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம், காரைக்குடி எஸ்எம் எஸ்வி மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், 11,12 ம் வகுப்பில் தேவகோட்டை என்.எஸ்.எம். வி.பி.எஸ். மேல்நிலைப்பள்ளி முதலிடம், தேவகோட்டை துாயமரியன்னை மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றனர்.பரிசளிப்பு விழா மாவட்டதலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் நடந்தது. மாநில பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்றார். நிர்வாகிகள் செந்தில்குமார், சேகர், மேரி, வெங்கடேசன் பரிசு வழங்கினர். கிளை தலைவர் சேவியர் ஏற்பாடுகளை செய்தார். கிளை செயலர் முத்துராமசாமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X