திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றியம் வடகரைத்தாழனூர் ஊராட்சியில் உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து முழு துப்புரவு பணி மேற்கொண்டனர்.
முகையூர் ஒன்றியம் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, வடகரைத்தாழனூர் கிராமத்தில் முழு சுகாதார விழிப்புணர்வு முகாம் உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செய்தனர்.வட்டார மருத்துவர் சுகுமார் தலைமை தாங்கினார். வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷாஜித்அலி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துர்கா தேவி முன்னிலை வகித்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன் சுகாதார பணியை துவக்கி வைத்தார்.
இதில், ஜே.சி.பி., எந்திரம் மூலம் தெருக்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிகிச்சை அளித்தனர்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் கதிரவன், ஊராட்சி செயலர் கந்தன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.