வெங்கையா நாயுடுவுக்கு ராஜ்யசபா பாராட்டு

Added : நவ 29, 2019
Share
Advertisement
புதுடில்லி :ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை சிறப்பாக கையாண்டதற்காக சபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.ராஜ்யசபாவில் கடந்த மூன்று நாட்களாக கேள்வி நேரத்தின் போது எல்லா கேள்விகளுக்கும் சம்பந்தபட்ட துறைகளின் அமைச்சர்களை பதில் அளிக்க வைத்து சபையை சிறப்பாக நடத்தியதற்காக சபை தலைவர் வெங்கையா நாயுடுவை உறுப்பினர்கள் பாராட்டினர்.ரயில்வே

புதுடில்லி :ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை சிறப்பாக கையாண்டதற்காக சபை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.ராஜ்யசபாவில் கடந்த மூன்று நாட்களாக கேள்வி நேரத்தின் போது எல்லா கேள்விகளுக்கும் சம்பந்தபட்ட துறைகளின் அமைச்சர்களை பதில் அளிக்க வைத்து சபையை சிறப்பாக நடத்தியதற்காக சபை தலைவர் வெங்கையா நாயுடுவை உறுப்பினர்கள் பாராட்டினர்.ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:சபை தலைவரின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் கேள்வி நேரம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. உறுப்பினர்களால் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர்களை பதில் அளிக்க வைத்துள்ளீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.சபை தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில்''சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கேள்வி நேரம் சிறப்பாகவும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் கையாளப்பட்டுள்ளது. இதற்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X