மண்டல 'சென்டைஸ்' விளையாட்டு

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:மண்டல அளவிலான, 11வது 'சென்டைஸ்' விளையாட்டு போட்டி, வரும் ஜன., 22ல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கிறது.கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் இன்டர் இன்ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் (சென்டைஸ்) மற்றும் அனைத்து இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர்கள் இணைந்து நடத்தும், 11வது 'சென்டைஸ்' விளையாட்டு போட்டி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் நடக்க உள்ளது. மாணவ-மாணவியருக்கான பூப்பந்து, இறகுப்பந்து, செஸ், கூடைப்பந்து, ஹேண்ட்பால், ஹாக்கி உள்ளிட்ட, 22 வகையான போட்டிகள் நடத்தப்படும்.வரும், 2019-20ம் ஆண்டுக்கான போட்டிகள் குறித்த உடற்கல்வி இயக்குனர்களுக்கான கூட்டம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. செயலாளர் ஜெயராம், பொருளாளர் ரவிக்குமார் மற்றும் பல்வேறு உடற்கல்வி இயக்குனர்கள் பங்கேற்றனர்.உடற்கல்வி இயக்குனர்கள் கூறுகையில், 'மண்டல அளவிலான, 11வது சென்டைஸ் போட்டி, வரும் ஜன., 22ல் துவங்கி, பிப்., 29 வரை நடக்கும். பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி, எஸ்.என்.எஸ்., - கொங்கு இன்ஜி., - பி.எஸ்.ஜி., டெக் - பி.எஸ்.ஜி., ஐ டெக் கல்லுாரிகளில் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். பங்கேற்க விருப்பமுள்ள கல்லுாரிகள், வரும் டிச., 31க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X