அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி. நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு எதிர்ப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
சென்னை :ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே ஏதாவது ஒரு செயற்கை காரணத்தை சுட்டிக்காட்டி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுப்பதற்கு

சென்னை :ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே ஏதாவது ஒரு செயற்கை காரணத்தை சுட்டிக்காட்டி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. இதுபோன்ற வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சம்கட்டம் தான் இன்ஜினியர்களும் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய மாநில அரசுகள் இதுமாதிரி ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்துவது மிகவும் ஆபத்தானது. எனவே வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும் ஐ.டி. நிறுவனங்களில் இருந்து கொத்துக் கொத்தாக ஊழியர்கள் நீக்கப்படுவதை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X