பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் கூட்டுறவு சங்கத்தேர்தல்

Added : நவ 29, 2019
Advertisement

இளையான்குடி : கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தபோது கண்ணமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்துக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்து, வேட்புமனுத் தாக்கல் நடந்தது. மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு தரப்பினர் தடையுத்தரவு பெற்றதை அடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டு கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 22 ந் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் தேர்தல் அலுவலர் கிருஷ்ணனிடம்,தி.மு.க., சார்பில் தமிழரசன் தலைமையில் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அ.தி.மு.க., அ.ம.மு.க.,வினர் என மொத்தம் 36 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று தேர்தல் நடந்ததை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மொத்தமுள்ள 3,241 உறுப்பினர்களில் மாலை 5:00 மணி வரை 1,364 உறுப்பினர்கள் வாக்களித்தனர்,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X