அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் கட்சிகள்: ம.நீ.ம., பாய்ச்சல்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :'இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த கட்சிகள் தற்போது கட்சிக்காரர்களையும் ஏமாற்றுகின்றன' என மக்கள் நீதி மையம் கட்சி கூறியுள்ளது.அக்கட்சி அறிக்கை:தமிழகத்தில் 2016ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்று வரை நடக்கவில்லை. இதனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.ஆளும்கட்சியும் ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் எதிர்க்கட்சியும் இதைப் பற்றி

சென்னை :'இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த கட்சிகள் தற்போது கட்சிக்காரர்களையும் ஏமாற்றுகின்றன' என மக்கள் நீதி மையம் கட்சி கூறியுள்ளது.அக்கட்சி அறிக்கை:தமிழகத்தில் 2016ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்று வரை நடக்கவில்லை. இதனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.ஆளும்கட்சியும் ஆள்வதற்கு ஆளாய் பறக்கும் எதிர்க்கட்சியும் இதைப் பற்றி கவலைப்படாமல் சுயநலத்திற்காக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்கின்றன. புலி வருது என்பது போல மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடத்தப் போவதாக அறிவிப்பதும் அதில் குறை இருப்பதாக எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதுமாக கண்ணாமூச்சி ஆடுகின்றன.கட்சிக்காரர்களிடம் விருப்ப மனு பெறுவதும் மறுபுறம் தேர்தலுக்கு தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதும் என இருந்த இவர்கள் இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்தனர். தற்போது கட்சிக்காரர்களையும் ஏமாற்றத் துவங்கியுள்ளனர்.வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது தான் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கும் உண்மையான மக்களாட்சி உருவாவதற்கும் வழி வகுக்கும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201912:40:01 IST Report Abuse
s.rajagopalan ஒரு சந்தேகம் ...உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுப்பட்டோர்கள் அவ்வளவு திறமையானவர்களா ...யோக்யர்களா .... என்ன ...? உங்கள் அவசரம் புரிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X