கால்பந்து இறுதி போட்டியில் பி.வி.எம்., - இந்தியன் பப்ளிக்

Added : நவ 29, 2019
Share
Advertisement
கோவை:மண்டல அளவில், பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து இறுதி போட்டியில், மாணவர் பிரிவில், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி - பி.வி.எம்., பள்ளியும், மாணவியர் பிரிவில், கிட்ஸ் அகாடமி - டில்லி பப்ளிக் பள்ளியும் மோதுகின்றன.சிங்காநல்லுார் சென்ட்ரல் ஸ்டுடியோ, பி.வி.எம்., குளோபல் பள்ளி சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி, பி.வி.எம்., பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.

கோவை:மண்டல அளவில், பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து இறுதி போட்டியில், மாணவர் பிரிவில், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி - பி.வி.எம்., பள்ளியும், மாணவியர் பிரிவில், கிட்ஸ் அகாடமி - டில்லி பப்ளிக் பள்ளியும் மோதுகின்றன.சிங்காநல்லுார் சென்ட்ரல் ஸ்டுடியோ, பி.வி.எம்., குளோபல் பள்ளி சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான கால்பந்து போட்டி, பி.வி.எம்., பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. மாணவர் பிரிவில், நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி, ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியை, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.இரண்டாவது அரையிறுதி போட்டியில், பி.வி.எம்., குளோபல் பள்ளி, கேம்போர்டு பள்ளியை, 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி மற்றும் பி.வி.எம்., குளோபல் பள்ளிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன.மாணவியர் பிரிவு, முதல் அரையிறுதி போட்டியில், டில்லி பப்ளிக் பள்ளி, ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியை, 1-0 என்ற கோல் கணக்கில்,வென்றது. இரண்டாவது அரையிறுதியில், கிட்ஸ் அகாடமி, பி.வி.எம்., குளோபல் பள்ளியை, 2-0 என்ற கோல் கணக்கில், வீழ்த்தியது. இறுதி போட்டியில், டில்லி பப்ளிக் பள்ளியும், கிட்ஸ் அகாடமியும் மோதுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X