சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : நவ 29, 2019
Advertisement

நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணையில் ஆஜராகாத 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அரசனுார் அருகே இலுப்பக்குடி மாவுளி மகன் செல்லசாமி. இவர் மீது 2012 ல் பதிவு செய்த வழக்கு ஒன்றின், விசாரணைக்கு சிவகங்கை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதே போன்று கோயம்புத்துார் செந்தில்குமார், துாத்துக்குடி செந்திராஜ்குமார், சென்னை கோயம்பேடு மணிகண்டன் ஆகியோர் மீது 2012 ல் பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு மாஜிஸ்திரேட் 2 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர். நீதிமன்ற கிளார்க் செல்வி புகாரின் பேரில், சிவகங்கை எஸ்.ஐ.,வாசிவம், 4 பேர் மீதும் வழக்கு பதிந்தார்.

மருத்துவமனை கண்ணாடியைசேதப்படுத்தியவர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே ஏனாதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி நீத்து. கடந்த 25 ம் தேதி பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த 2 மணி நேரத்திற்கு பின் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதில் ஆத்திரமுற்ற ராஜாவின் உறவினர் ஏனாதியை சேர்ந்த மங்களேஸ்வரன் என்பவர் பிரசவ வார்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். மருத்துவ அலுவலர் மீனா புகாரின்பேரில், சிவகங்கை இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்துள்ளார்.

கணவன் கண்முன்னே மனைவி பலி

திருப்புவனம்: மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 43,மனைவிமுருகேஸ்வரி 38, இவர்களது ஒரு வயது பேரன் தர்ஷன். மூன்று பேரும் டூவீலரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு மதுரை திரும்பினர். பரமக்குடி -- மதுரை 4 வழிச்சாலையில் மணலுாரில் பின்னால் வந்த கார் டூ வீலர் மீது மோதியது, இதில் முருகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலகிருஷ்ணன் ஹெல்மெட் அணிந்திருந்தும் அதிவேகத்தில் கார் மோதியதால் அவரும் , பேரன் தர்ஷனும் காயமடைந்தனர் , திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X