கோவை:கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டி, கணுவாய் யுவபாரதி பள்ளியில் நேற்று நடந்தது; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஷாப்ட் பால் த்ரோ ஆகிய போட்டிகள் நடந்தன.உயரம் தாண்டுதல் மாணவர் பிரிவில், நேவி சில்ரன் பள்ளி ஜோசப் ஸ்டாலின், சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி துஷ்யந்த், கோவை பப்ளிக் பள்ளி லிஷாந்த் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி பிரத்யக் ஷா, கிரேஸ் சர்வதேச பள்ளி யாழினி, நேவி சில்ரன் பள்ளி பார்வதிபிரஜித் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.குண்டு எறிதல் மாணவர் பிரிவில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி கேசவ்ராம், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மிதுல்ராம், செட்டிநாடு வித்யா மந்திர் நகுல்பிரணவ் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.மாணவியர் பிரிவில், சாகர் சர்வதேச பள்ளி ஹர்ஷிதாஸ்ரீ, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி மகதி, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி ஸ்ருதிசிவராம் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.ஷாப்ட் பால் த்ரோ; 8 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி தருண்ராம், ரிச்சர்டு மேத்யூ தாமஸ் மற்றும் ஆதர்ஷ் வித்யாலயா யஷ்வந்த் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.மாணவியர் பிரிவில், விவேகானந்தா அகாடமி ஹர்ஷினி, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி ெஷர்லின், எஸ்.எஸ்.எம்., சென்ட்ரல் பள்ளி மேகா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.