சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Added : நவ 29, 2019
Share
Advertisement
உளுந்தூர்பேட்டை : ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் 108 ஏரி, குளங்கள் இருந்தன. இதனால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்தது. இந்த இடங்கள் எல்லாம், காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களால்

உளுந்தூர்பேட்டை : ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் 108 ஏரி, குளங்கள் இருந்தன. இதனால் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்தது. இந்த இடங்கள் எல்லாம், காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டு, ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டது. இதனால் குடிநீருக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையில், ஐகோர்ட் உத்தரவின் பேரில், ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.இதன் தொடர்ச்சியாக உ. கீரனூர் ஏரி, உளுந்தூர் ஏரி பகுதிகளில் உள்ள வீடு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நேற்று முன்தினம் ஒலிபெறுக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.இதனை அறிந்த உ.கீரனூர் ஏரி பகுதி அருகே உள்ள ரேணுகா மாரியம்மன் கோவில் பகுதி, வண்டிமேடு பகுதியை சார்ந்த பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கிய பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரி நேற்று காலை 11.45 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தாசில்தார் வேல்முருகன், இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், பிற்பகல் 12.15 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X