சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளாற்றில் தற்காலிக சாலை துண்டிப்பு

Added : நவ 29, 2019
Advertisement
 வெள்ளாற்றில் தற்காலிக சாலை துண்டிப்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே, வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டதால், இரு மாவட்டங்களை சேர்ந்த 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே, அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலையை பயன்படுத்தி, அரியலுார் மாவட்ட கிராமங்களான கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றனர்.

இதேபோல், கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், அரியராவி, மாளிகை கோட்டம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி, அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக, வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் செம்மண் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்து வரும் கனமழையால், நேற்று காலை 8:00 மணியளவில், ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழை நீரால், வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக செம்மண் சாலையில் உடைப்பு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, மேம் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் மூலம், தற்காலிக செம்மண் சாலையை மற்ற இடங்களிலும் துண்டித்து தண்ணீர் செல்லும்படி வழி ஏற்படுத்தினர்.

இதனால் இரு மாவட்டங்களை சேர்ந்த 40 கிராம மக்கள் வெளி ஊர்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு மாவட்ட மக்களும் தலா 15 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேம்பால பணி பாதிப்புசவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியே 86 லட்சத்தில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பால பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X