தமிழ்நாடு

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ளுங்க!

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுத்தள்ளுங்க!

பேரூர்:காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவது தொடர் கதையாவதால், அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் எடுத்த நடவடிக்கை போல், தமிழகமும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகளிடம் வலுத்துள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், விவசாயமே பிரதான தொழில். 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.கடந்த காலங்களில் மழை பொய்த்து பாசன கிணறுகள் வறண்டன. போர்வெல்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட, விவசாயமே கேள்விக்குறியானது. நடப்பாண்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில், தென்மேற்கு பருவமழை கொட்டியது.வடகிழக்கு பருவமழையும் கை கொடுத்து வருகிறது.
இதனால், தரிசாக கிடந்த நிலங்களில் பயிர்களை நடவு செய்து, பசுமை போர்வையாக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர். இதற்கு வேட்டு வைக்கும் வகையில், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் துவங்கியுள்ளது. குறிப்பாக, மலையடிவாரம் மற்றும் நொய்யல் ஆற்றின் கரையோர விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கின்றன.மாலை நேரமானதும், கும்பல் கும்பலாக புகுந்து, பயிர்களை துவம்சம் செய்கின்றன.
சோலார் மின் வேலி, கலர் கலர் துணிகளில் வேலி, ஒலிப்பெருக்கி அமைத்து, பல்வேறு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை. இதனால், கர்நாடகா, கேரளா அரசுகள் எடுத்த நடவடிக்கை போல், தமிழகமும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.தொண்டாமுத்துார் ஒன்றிய விவசாயிகள் கூறுகையில், 'காட்டுப்பன்றிகள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி, விளைநிலங்களை நாசம் செய்கின்றன.இழப்பீடும் முறையாக கிடைப்பதில்லை.
அறுவடை காலங்களில், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுத்தள்ள கர்நாடகா, கேரள அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. 'அதேபோன்ற நடவடிக்கையை, தமிழக அரசும் எடுக்க வேண்டும். இல்லையெனில், விளைச்சல் கடுமையாக பாதித்து, விலை உயரத்துவங்கும். அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்' என்றனர்.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''தமிழகத்தில், 10 மாவட்டங்களுக்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. ''காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் பாதித்து இருந்தால், வி.ஏ.ஓ.,க்களிடம் விவசாயிகள் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கை அடிப்படையில், தனிக்குழு அமைத்து, உண்மை தன்மை அறியப்படும். அதன்பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
30-நவ-201906:47:57 IST Report Abuse
RajanRajan அனுமதி கொடுத்த பத்து மாவட்டங்கள் எவை? விவசாயிகளின் காவலன் முருவன் அண்டை மாநிலங்களை பார்த்து தெளிவு பெற வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X