சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் பரவலான மழை காட்டுமன்னார்கோவிலில் 118 மி.மீ.,

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடரும் மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி இயல்பான மழையை விட குறைவான அளவே மழை பெய்தது. இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த 3 மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.கடலுார் நகரில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலுாரில் பலத்த மழை பெய்ததால் திருப்பாதிரிப் புலியூர், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

கடலுார் சில்வர் பீச்சில் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கடலுார் பாரதி ரோடு, பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட அடைப்பை நகராட்சி அதிகாரிகள் நவீன கருவிகளை கொண்டு சரி செய்தனர். நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

கடலுார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை பதிவாள மழை அளவு:காட்டுமன்னார்கோவிலில் 118 மி.மீ., லால்பேட்டை - 83.80; அண்ணாமலை நகர்- 46.60, சிதம்பரம்- 44.40, வேப்பூர்- 37, மே.மாத்துார் -36, பெலாந்துறை- 35.20, காட்டுமயிலுார் -35, வடக்குத்து- 24, சேத்தியாத்தோப்பு -23.30, பண்ருட்டி - 20, கொத்தவாச்சேரி- 19, குறிஞ்சிப்பாடி -17, தொழுதுார்- 16, லக்கூர் -14.20, வானமாதேவி -12.60, குப்பநத்தம்-12.20, கடலுார் -11.20, கீழ்ச்செருவாய் -10, புவனகிரி- 9, விருத்தாசலம் 7.20, கலெக்ரேட் 6.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X